தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது ஏன்? சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம்!
Publish Date: Mon, 21 Mar 2022 (14:52 IST)
Updated Date: Mon, 21 Mar 2022 (14:53 IST)
தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது ஏன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து சட்டமன்றத்தில் விளக்கமளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதாவது: பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து.அதனால் இத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது
திருமண தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும் என்பதாலும்,
பெண்ணுரிமை என்ற அடிப்படையில் இத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம். சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் மாற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்