Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தினமும் பத்திரிகை படிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (14:34 IST)
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தினமும் காலை பத்திரிகை படிக்க வேண்டும், தொடர்ந்து ஊடகங்களை பார்த்து வரவேண்டும் என கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தினமும் பத்திரிகை படித்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது, உங்கள் மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் காணும் செய்திகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும், அவ்வாறு தீர்வு காணப்பட்ட செய்திகளை ஊடகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை உங்களின் காலை பணியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
 
மேலும் கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும், விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்கள் எந்தவித குறைபாடின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைய வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
 
மேலும் நாளை முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், 10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்றும், சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.5 ஆக குறைக்கப்படும் என்றும்  கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?

இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?

நேற்றைய திடீர் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments