Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 5 March 2025
webdunia

சசிகலாவுக்கு ஆப்பு வைக்க அடுத்த திட்டத்துடன் களம் இறங்கும் ஓபிஎஸ்: தலைமை செயலகத்துக்கு இன்று வருகை!

சசிகலாவுக்கு ஆப்பு வைக்க அடுத்த திட்டத்துடன் களம் இறங்கும் ஓபிஎஸ்: தலைமை செயலகத்துக்கு இன்று வருகை!

Advertiesment
சசிகலாவுக்கு ஆப்பு வைக்க அடுத்த திட்டத்துடன் களம் இறங்கும் ஓபிஎஸ்: தலைமை செயலகத்துக்கு இன்று வருகை!
, திங்கள், 13 பிப்ரவரி 2017 (09:29 IST)
முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தலைமை செயலகம் வர உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வரின் இந்த திடீர் நடவடிக்கை சசிகலா தரப்புக்கு எதிராகத்தான் இருக்கும் என கருதுகின்றனர் அரசியல் ஆர்வலர்கள். இதனால் சசி. தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.


 
 
அதிமுக எம்எல்ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டதும் சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என கூறியிருந்தார்.
 
மேலும் சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதற்கான கையெழுத்து இயக்கத்தையும் அவரே தொடங்கி வைத்தார்.
 
இந்த இரண்டும் சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஆளுநரை சந்தித்த முதல்வர் இது தொடர்பான கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தார். மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் சில காவல்துறை அதிகாரிகளை பணி மாற்றம் செய்யவும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று தலைமைச்செயலகம் செல்ல இருக்கும் முதல்வர் பன்னீர்செல்வம் இது தொடர்பாக முக்கிய கோப்புகளில் கையெழுத்து போடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் அணியில் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ்?: மாஃபா பாண்டியராஜன் அழைப்பு!