Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துண்டுச்சீட்டு இல்லாமல் நேருக்கு நேர் பேச தயாரா? முக ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (13:56 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. திமுக அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தற்போது களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரச்சாரத்தில் சொற்போர் நடந்து வருகிறது என்பதும், அதிமுக அரசு குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் முக ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் இன்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கு துரோகம் செய்பவர் ஸ்டாலின் என்றும் இவர் எப்படி மக்களை பாதுகாப்பார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் துண்டு சீட்டு இல்லாமல் கருத்து மோதலில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம், ஸ்டாலின் தயாரா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார் 
 
முதல்வரின் இந்த சவாலை முக ஸ்டாலின் ஏற்பாரா? துண்டு சீட்டு இல்லாமல் கருத்து மோதலில் ஈடுபடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments