புதுச்சேரி ஆளுநராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்து விட்டார் என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அவர் பதவி ஏற்றுக்கொண்டார் என்பதும், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் புதுவை ஆளுனராக பதவி ஏற்ற அன்று மாலையே புதுவை முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழிசை உத்தரவு பிறப்பித்தார். வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிறப்பித்த உத்தரவால் புதுவையில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு குறித்து விமர்சனம் செய்த புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது