முதல்வர் ஜெயலலிதாவின் வாகனம் அப்பல்லோ வந்தது: போயஸ் கார்டன் வரை போலீஸ் குவிப்பு!
முதல்வர் ஜெயலலிதாவின் வாகனம் அப்பல்லோ வந்தது: போயஸ் கார்டன் வரை போலீஸ் குவிப்பு!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டது. இந்நிலையில் அப்பல்லோவில் தற்போது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா வழக்கமாக செல்லும் முதல்வர் கான்வாய் என கூறப்படும் வாகனம் தற்போது அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையின் முன்பு 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் உள்ள போயஸ் கார்டன் முதல் அப்பல்லோ மருத்துவமனை உள்ள க்ரீம்ஸ் சாலை வரை போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இன்று அதிகாலையிலேயே முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என அப்பல்லோ வட்டார தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லப்படுவார் என கூறப்படுகிறது.