Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை வீடு திரும்புகிறார்?

முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை வீடு திரும்புகிறார்?

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (13:19 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை போயஸ் கார்டன் திரும்புகிறார் என பரபரப்பு தகவல் பரவி வருகிறது. கார்டன் வட்டாரமே இந்த தகவலால் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.


 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 57 நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். லண்டன், எயிம்ஸ், அப்பல்லோ மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
 
செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது இயல்பான முறையிலேயே சுவாசித்து வருவதாகவும் வெறும் 15 நிமிடம் மட்டுமே செயற்கை சுவாசம் எடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது.
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை 5 முதல் 7 மணிக்குள் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. ஆனால் அவர் இன்று மாலையே வீடு திரும்புவார் என்ற பரபரப்பு தகவல் பரவி வருகிறது. இதனால் கார்டன் வட்டாரத்தில் அதற்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
ஜோதிடர் குறித்து கொடுத்த நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை வீடு திரும்புவார் எனவும், பரபரப்புக்கு இடம் கொடுக்காமல் இருக்க அவர் வீடு திரும்பிய பின்னரே அப்பல்லோவில் இருந்து அவர் வீடு திரும்பியதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments