Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 ரூபாய் கலர் ஜெராக்ஸ்: ரூ.200-க்கு பொருள் வாங்கி ரூ.1800 சில்லரை வாங்கிய பலே சிறுவர்கள்!

2000 ரூபாய் கலர் ஜெராக்ஸ்: ரூ.200-க்கு பொருள் வாங்கி ரூ.1800 சில்லரை வாங்கிய பலே சிறுவர்கள்!

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (12:35 IST)
பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்தார். அதனை வங்கிகளில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெறலாம் என கூறப்பட்டது. கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


 
 
ஆனால் தற்போது வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டின் கலர் ஜெராக்ஸ் எடுத்து ஆங்காங்கே ஏமாற்றப்படுவதாக செய்திகள் வருகிறது. இந்த புதிய நோட்டை பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாததால் எளிதாக கலர் ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றி விடுகிறார்கள்.
 
கடந்த 12-ஆம் தேதி சிக்மகளூர் விவசாய பொருட்களின் சந்தை பகுதியில் புதிய 2000 ரூபாய் நோட்டின் கள்ள நோட்டு கண்டெடுக்கப்பட்டது. இது புதிய நோட்டை வைத்து எடுக்கப்பட்ட கலர் ஜெராக்ஸ் ஆகும்.
 
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் நேற்று முன்தினம் 4 பள்ளி சிறுவர்கள் மளிகை கடை ஒன்றுக்கு சென்று புதிய 2000 ரூபாய் நோட்டை கொடுத்து பால், சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிவிட்டு மீதி 1800 ரூபாய் வாங்கி சென்றுள்ளனர்.
 
பின்னர் கடைக்காரருக்கு சிறுவர்கள் கொடுத்த அந்த ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் வர வங்கிக்கு சென்று அதனை சோதித்ததில் அது கலர் ஜெராக்ஸ் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments