Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் கஷ்டப்படக்கூடாது: ஆலோசனை கூட்டத்தில் ஈபிஎஸ் அட்வைஸ்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (15:48 IST)
புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். 
 
வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் மணிக்கு 13 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புதிய புயலுக்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் தென் தமிழக பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 8 மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டிசம்பர் 4 வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம். புதிதாக புயல் உருவாவதையொட்டி போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என கூறினார். 
 
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புயல் ஏற்பட்டாலும், அரசாங்கம் சரியான வழிவகைகளை பின்பற்றி மக்களை பாதுகாத்து வருகிறது. அதேபோல், இனி வரக்கூடிய புயலில் இருந்து மக்களுக்கு எந்த பாதிப்பும், சிரமமும் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என முதல்வர் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியதாக தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments