Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10ம் வகுப்பு தேர்வு முடிவு : மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

Advertiesment
10ம் வகுப்பு தேர்வு முடிவு : மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை
, புதன், 25 மே 2016 (10:09 IST)
தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று புதன்கிழமை வெளியாகி உள்ளது. இதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
 

 
அதில், 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். 2016 பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 25.05.2016 (புதன்கிழமை) முதல் 28.05.2016 (சனிக்கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
 
மறுகூட்டல் கட்டணம்:
 
பகுதி –1 மொழி - ரூ.305/-, பகுதி 2 மொழி (ஆங்கிலம்) - ரூ.305/-, பகுதி – 3 - கணிதம், அறிவியல் மற்றும் - ரூ.205/-, சமூக அறிவியல், பகுதி 4 விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/-
 
கட்டணம் செலுத்தும் முறை:
 
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 
ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: இரண்டு பேர் 499 மதிப்பெண் எடுத்து முதலிடம்