Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (13:40 IST)
நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் கள ஆய்வுக் கூட்டத்தில் இரு கோஷ்டியினர் அடிதடி செய்து மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மதுரையில் நடந்த அதிமுக ஆய்வு குழு கூட்டத்திலும் அடிதடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் முன்னிலையில் மதுரையில் இன்று கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் செல்லூர் ராஜு கோஷ்டி மற்றும் டாக்டர் சரவணன் கோஷ்டி நேருக்கு நேர் மோதிக்கொண்டு, தங்களை ஏன் பேச அனுமதிக்கவில்லை என கூறியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அமைதியாக இருக்கும்படி, மைக்கில் வேண்டுகோள் விடுத்தும் கட்சி நிர்வாகிகள் அவரது பேச்சை மதிக்காமல் அடிதடிகளில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லையில் அதிமுக ஆய்வு கூட்டத்தில் அடிதடி, மதுரையில் கள ஆய்வுக் கூட்டத்தில் அடிதடி என தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி சண்டை நடந்து வருவது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

அடுத்த கட்டுரையில்
Show comments