Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியரா? என கேட்ட விவகாரம்: சி.ஐ.எஸ்.எப் கேள்விக்கு பதில் அளிப்பாரா கனிமொழி?

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (13:14 IST)
திமுக எம்பி கனிமொழி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எப் ஊழியர் ஒருவர் ஹிந்தியில் கேள்வி கேட்டதாகவும் எனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்குமாறு கூறியதாகவும் அதற்கு அவர் நீங்கள் இந்தியரா? எனக் கேட்டதாகவும் பதிவு செய்திருந்தார் 
 
இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த கருத்துக்கள் பதிவாகி வந்தன. முன்னாள் பிரதமர் விபிசிங் தமிழகம் வந்தபோது அவர் இந்தியில் பேசியதை தமிழில் மொழிபெயர்த்த கனிமொழிக்கு ஹிந்தி தெரியாதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில் கனிமொழிக்கு ஆதரவாகவும் பல்வேறு கமெண்ட்டுக்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கனிமொழியின் இந்த குற்றச்சாட்டுக்கு சி.ஐ.எஸ்.எப் பதில் அளித்து உள்ளது. கனிமொழி அவர்களுக்கு ஏற்பட்ட துரதிஷ்டமான சம்பவத்துக்கு நாங்கள் உண்மையில் வருந்துகிறோம். ஆனால் இது குறித்து விசாரணை செய்ய சில விபரங்கள் தேவைப்படுகிறது. கனிமொழி அவர்கள் எங்கிருந்து எங்கு பயணம் செய்தார்? எந்த விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்தது? எந்த தேதி மற்றும் நேரம்? ஆகியவற்றை குறிப்பிட்டால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கனிமொழி சி.ஐ.எஸ்.எப் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

புனித வெள்ளி.. தொடர் விடுமுறை! படையெடுக்கும் மக்கள்! - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments