இந்து கடவுள் படங்களை எரித்து கழிவறையில் போட்ட மதபோதகர் கைது

வியாழன், 7 நவம்பர் 2019 (09:37 IST)
இந்து கடவுளின் படங்களை எரித்து அதன் சாம்பலை கழிவறையில் போட்ட கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருபட்டி என்ற பகுதியில் ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் பெந்தேகோஸ்தே திருச்சபையில் மதுரையை சேர்ந்த ஜான் பிரிட்டோ என்ற 53 வயது நபர் மதபோதகராக இருந்து வருகிறார்.
 
இவர் சமீபத்தில் இந்து கடவுளின் படங்களை எரித்து அதன் சாம்பலை கழிவறையில் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான 'வீடியோ' மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து இந்து முன்னணி செயலர் மாதேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத போதகரை போலீசார் கைது செய்தனர்,
 
அவர் மீது பிற மதம் மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டது உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தந்தைக்கு ஏன் சிலை ? – கமல் விளக்கம் !