நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

Mahendran
சனி, 28 செப்டம்பர் 2024 (09:14 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் குறித்து அவரது கணவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சமீபத்தில் நீதிமன்ற உத்தரவால் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது விடுதலையை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் மேல்முறையீடு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அருகே ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் போது அவரது கணவரும் உடன் இருந்ததை அடுத்து கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான தீர்ப்பில் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஹேம்நாத் விடுதலையை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் முறையாக விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் எனவே ஹேம்நாத் விடுதலையை ரத்து செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

அடுத்த கட்டுரையில்
Show comments