Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தாவுடன் இருக்கும் மார்ஃபிங் போட்டோ – புலம்பித் தள்ளிய சின்மயி !

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:33 IST)
நித்யானந்தாவோடு சின்மயியும் அவரது தாயாரும் இருப்பது போன்ற மார்ஃபிங் புகைப்படம் இணைய உலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பாடகி சின்மயி மீ டூ புகாருக்குப் பிறகு சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவரை ட்ரோல் செய்யும் வீடியோக்கள், மீம்ஸ்கள் அதிகமாக நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு அவ்வப்போது அவரும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது தாயாரோடு மோசடி சாமியார் நித்யானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த புகைப்படம் மார்ஃப் செய்யப்பட்டது எனக் கூறி உண்மையான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். ஆனாலும் அதைக் கண்டுகொள்ளாத  நெட்டிசன்கள் மீண்டும் மீண்டும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து அவரைக் கேலி செய்து வந்தனர். இதனால் விரக்தியடைந்த சின்மயி ‘இந்த புகைப்படம் உண்மையில்லை என நான் நிரூபித்து விட்டேன். இருந்தும் ஏன் இதை திரும்ப திரும்ப பகிர்கிறார்கள் எனத் தெரியவில்லை. இதெல்லாம் யாராவது காசு கொடுத்து செய்கிறார்களா என்று தெரியவில்லை’ எனப் புலம்பும் தொனியில் சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments