தேசிய மீடியாக்களே பொள்ளாச்சி விஷயத்தை கையில் எடுங்கள் : கெஞ்சும் சின்மயி

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (12:49 IST)
தேசிய மீடியாக்கள் பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என சின்மயி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என பேசப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் சின்மயி, டிவிட்டர் பக்கத்தில் தேசிய மீடியாக்கள் பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும். இது உண்மையை நாடறிய செய்யும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்