Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொருளாதார வளர்ச்சியின் பாதையில் அடியெடுக்கும் சீனா! சிஐடிஐசி தகவல்

பொருளாதார வளர்ச்சியின் பாதையில் அடியெடுக்கும் சீனா!    சிஐடிஐசி தகவல்
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (17:21 IST)
அதிவேக பொருளாதார வளர்ச்சியின் பாதையில் அடியெடுக்கும் சீனா! கரோனா பாதிப்பு காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு உயிரிழப்பை தாண்டிய பெரும் பாதிப்பாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9சதவீதம் சரிவடைந்து உள்ளதாக இந்திய அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பின் தரவுகளின்படி அமெரிக்காவில், 2020இல் முதல் ஆறு மாதங்களில் அதன் ஜிடிபி -10.6 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி, முறையே, -11.9, -17.1, -18.9 ஆகிய விகிதத்தில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த அளவைவிட சரிவடைந்துள்ளது மேலும் பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகளின் ஜிடிபி 20 சதவிகிதத்தை விட அதிகமாக சரிவடைந்துள்ளது. நுகர்வோர் செலவினம் மற்றும் தொழில்துறை உற்பத்தியை மீட்டெடுப்பதற்காக நிதிச் சந்தைகள் ஊக்குவிக்கப்பட்டாலும், இரண்டும் கடந்த கால அளவை விட மிகக் குறைவாகவே உள்ளன, மேலும் தொடர் முடக்க நடவடிக்கைகளினால் மீட்பு இன்னும் தடம் புரண்டது. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைக் குறைப்பதன் மூலமும், முதலீடுகளைக் குறைப்பதன் மூலமும் தங்கள் இலாபங்களைப் பாதுகாக்கும் நிறுவனங்கள் அதிக வேலையின்மை, குறைந்த உற்பத்தி ஆகியவை 2021 இல் நுகர்வோர்களின் வாங்கும் திறனை குறைக்கும் என்பது உலகளாவிய சூழலாக இருக்கிறது.

எனினும் முதன் முதலில் கரோனா பாதிப்பை சந்தித்து துரிதமான நடவடிக்கைகளால் பெரும் தொற்றில் இருந்து விரைவாக மீண்டுள்ள சீனாவின் பொருளாதாரமும் தற்போது மீட்சியடையத் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் இரண்டாவது காலாண்டில் 3.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்து வலுவடைந்து வந்த சீனப் பொருளாதாரம் COVID-19 தொற்றுநோய் பரவலால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பு, குறைந்த சந்தை தேவை, மற்றும் நுகர்வு தடைபட்டதாலும், மக்களின் வருவாய் வாய்ப்புகளை பலவீனமடைந்ததாலும் பின்தங்கின.

இந்நிலையில் பலவீனமாக இருந்த நுகர்வு குறியீடு ஆகஸ்ட் மாதத்தில் சந்தைத் தேவையின் அடிப்படையில் வளர்ச்சியடைந்துள்ளதோடு, உற்பத்தியை மேம்படுத்தி, சீனாவின் பொருளாதார மீட்சியைத் தக்கவைக்கும் என்று பொருளாதார ஆய்வாளர் ஜாங் டெலி கூறினார். மேலும் சீனாவில் தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதால் வணிக நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறைந்த பின் உள்கட்டமைப்பு முதலீடும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆகஸ்ட் மாதத்தில், உற்பத்தித் துறைக்கான புதிய ஏற்றுமதி ஆர்டர்களின் முந்தைய அட்டவணை 49.1 ஆக இருந்தது, இது கடந்த மாதத்தில் 48.4 ஆக இருந்தது என்று என்.பி.எஸ் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் சுற்றுலா கேட்டரிங், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் தொழில்களின் மீட்சி ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி செய்யாத துறையின் பி.எம்.ஐ 55.2 ஆக உயர்ந்துள்ளது, இது ஜூலை மாதத்தில் 54.2 ஆக இருந்தது. இதற்கிடையில் சீனாவில் வீட்டு நுகர்வு மற்றும் புதிய வகை உள்கட்டமைப்புகளில் முதலீடு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இவ்வாண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் நடுத்தரம் அல்லது அதிவேக பொருளாதார வளர்ச்சியின் பாதையில் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயினும்கூட சிறு வணிகர்களுக்கு கூடுதல் சலுகை ஆதரவு தேவை, அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் இதனால் வேலைவாய்ப்பு இழப்பு அதிகரிக்கும் என அஞ்சுவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக ஜூலை மாதத்தில் 48.6 ஆக இருந்த சிறு உற்பத்தியாளர்களுக்கான நுகர்வு குறியீடு ஆகஸ்ட் மாதத்தில் 47.7 ஆக குறைந்துள்ளது .

என்று என்.பி.எஸ் தெரிவித்துள்ளது. கணக்கெடுக்கப்பட்ட சிறு உற்பத்தியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆகஸ்டில் அழுத்தத்திற்கு உள்ளாகினர், மேலும் சிலர் இறுக்கமான பணப்புழக்கங்களுடன் போராடினர். "சிறு வணிகங்களின் நிலை மற்றும் வேலைவாய்ப்பு மீதான அழுத்தம் ஆகியவை பொருளாதாரத்தில் பலவீனமான இணைப்புகளாகவே இருக்கின்றன. இயக்க சுமைகளை குறைத்தல் மற்றும் நிதி ஆதரவை வலுப்படுத்துவது உள்ளிட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ அதிக இலக்கு கொள்கை முயற்சிகள் இருக்க வேண்டும்" என்று ஒரு சிஐடிஐசி தெரிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்டர் ஹீட்டரை ஆன் செய்துவிட்டு அலட்சியம் – குழந்தையின் உயிரை வாங்கிய சம்பவம்!