Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”முடிஞ்சா தொட்டு பார்..!” தைவானில் அமெரிக்க போர்க்கப்பல்! – ஆத்திரமடைந்த சீனா!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:23 IST)
தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா தனது இரண்டு போர் கப்பல்களை தைவான் ஜலசந்தி வழியாக அனுப்பியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு போருக்கு பின்னர் சீனாவிலிருந்து பிரிந்த தைவான் தன்னை தனி நாடாகவே கருதி வருகிறது. ஆனால் சீனாவோ தைவானை தங்களது எல்லைக்குட்பட்ட பிராந்தியம் என்று சொல்லி வருகிறது.

இதற்கிடையே அமெரிக்கா தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ALSO READ: ”உக்ரைன் நிலமை ஆக்கிடாதீங்க..” – உலக நாடுகளிடம் உதவி கேட்கும் தைவான்!

இந்நிலையில் அடுத்தடுத்து சில அமெரிக்க எம்.பிக்களும் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் கடுப்பான சீனா தைவானை சுற்றி கடல் பகுதிகளில் போர் பயிற்சிகளை நடத்தி தைவானுக்கு எச்சரிக்கை விடுத்தது.

தைவானை மிரட்டினால் சும்மா இருக்குமா அமெரிக்கா? முடிந்தால் தொட்டுப்பார் என்கிற ரீதியில் தைவான் ஜலசந்தி வழியாக யு.எஸ்.எஸ் ஆண்டிடம், யு.எஸ்.எஸ் சான்ஸ்லர்வில்லே ஆகிய போர்க்கப்பல்களை அனுப்பி சீனாவுக்கு பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா.

இது தங்களை ஆத்திரமூட்டுவதற்காக செய்வது போல உள்ளதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. ”அமெரிக்க போர்க்கப்பல்களில் நகர்வை தீவிரமாக கண்காணித்தோம். எந்த நேரத்திலும் எந்த ஆத்திரமூட்டலையும் முறியடிக்க சீன படைகள் தயாராக உள்ளன” என சீன ராணுவத்தின் கிழக்கு கட்டளை பிரிவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நீக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

வேங்கை வயல் வழக்கு.. வேறு நீதிமன்றத்திற்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments