Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிலம்பொலி செல்லப்பனாரின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

silampoli sellappan
, சனி, 23 செப்டம்பர் 2023 (18:49 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான திமுக  ஆட்சி நடந்து வரும் நிலையில்,  இந்த ஆட்சியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

இந்த நிலையில், சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள சிலையையும் அறிவகத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’'தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன்' எனப் பாராட்டப்பட்டு, 'சிலம்பொலி' செல்லப்பன் எனச் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் புகழப்பட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள சிலையையும் அறிவகத்தையும் திறந்து வைத்தேன்.

பேரறிஞர் அண்ணாவாலும் முத்தமிழறிஞர் கலைஞராலும் போற்றப்பட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள், தமது 90-ஆவது அகவையிலும் குடிமக்கள் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியை ஆற்றினார்.

தாம் பெற்ற பட்டத்துக்கு நீதி செய்த தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனாரின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும்!’’என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரணாசி கிரிக்கெட் மைதானம் சிவனுக்கு சமர்ப்பிக்கப்படும்- பிரதமர் மோடி