Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை புகழ்ந்து பேசிய எதிர்க் கட்சி துணைத்தலைவர் !

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (17:35 IST)
சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமை பேசியதைப் பார்து நான் அசந்துபோய்விட்டதாக திமுக பொருளாளர் மற்றும் சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிவுற்றதாக சபாநாயகர் தெரிவித்தார். அதற்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் : நேற்று கேள்வி நேரத்தைக் குறைத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அதைக் குறைக்கமுடியாது என்று கூறினீர்கள்..அதை ஏற்றுக்கொண்டேன்.
 
இந்த ஆட்சிக்கு முன்னால்  இருந்த ஆட்சியில் கேள்வி நேரத்தின் போது,பொதுப்பணித்துறை , காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக கேள்விகள் கட்டாயம் இடம்பெறும். சமீபகாலமாக இத்துறையில் கேள்விகளே எழுவதில்லை.
 
இந்தக் கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொல்ல முடியாதவர் அல்ல. முதல்வர் சிறப்பாக பதில் சொல்லக்கூடியவர். அவரது பதிலைக் கேட்டு நாம் அசந்துபோயுள்ளேன்.அதனால் நாளை பொதுப்பணித்துறை ,காவல்துறை , தொடர்பான கேள்விகள் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து பேசிய துணைமுதல்வர் பன்னீர் செல்வம், முதல்வர் பொறுப்பேற்றுள்ள அனைத்து  துறைகளிலும் நீங்கள் கேட்டாலும் அது குறித்து பதில் அளிக்க தயாராகவே உள்ளார் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments