Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தற்காலிக கூரை அமைக்க தார்பாய் வழங்க முதல்வர் உத்தரவு

Advertiesment
தற்காலிக கூரை அமைக்க தார்பாய் வழங்க முதல்வர் உத்தரவு
, வெள்ளி, 23 நவம்பர் 2018 (16:37 IST)
நான்கு லட்சம் வீடுகளை இழந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களுக்கு  தற்காலிக கூரை அமைக்க நுகர் பொருள் வாணிபக்கழகம் மூலமாக வாங்கி இதை உடனடியாக செயல்படுத்துமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது உத்தரவிட்டுள்ளார்.
முழு சேதமடைந்த குடிசைக்கு ரூ10000 பகுதி சேதமடைந்த குடிசைக்கு ரூ4000 வழங்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் மூலமாக செயல்படுத்த வேண்டுமெனெ கூறியுள்ளார்.
தார்பாய் வழங்கினால் உதவியாக இருக்கும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலமாக வழங்கவும் இதனை துரிதமாக செயப் படுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
 
டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிகை விடுத்துள்ள நிலையில் முதல்வர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காளி மந்திரத்த சொல்லிட்டு தான் களத்துல இறங்குவேன்: கொலையாளி பகீர் வாக்குமூலம்