Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

Mahendran
வெள்ளி, 13 ஜூன் 2025 (18:46 IST)
எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. 
 
பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி எனபதை பெருமையாகக் கூறுவதோடு, இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன். 
 
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதலமைச்சர், விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் திரு. ஸ்டாலின் மட்டுமே. 
 
'நான் உண்மையான விவசாயியா ? நீங்கள் உண்மையான விவசாயியா?' நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு இல்லை.
 
தமிழக மக்கள் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அம்மாவின் அரசை மனதில் நிறுத்தியும், இன்று சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் இந்தியாவிலேயே அதிக அளவு கடன் வாங்கி முதலிடத்தைப் பெற்றிருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களையும், தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்