முதலமைச்சரின் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், முதன்மை செயலாளர் பதவிக்கு உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பு வகித்து வந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் என்.முருகானந்தம் வகித்து வந்த முதல்வரின் முதலாவது முதன்மை செயலாளர் பதவிக்கு உமாநாத் ஐ.ஏ.எஸ். இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று முதல்வரின் இரண்டாவது முதன்மை செயலாளராக எம். எஸ். சண்முகமும் ஐ.ஏ.எஸ்., முதல்வரின் மூன்றாவது முதன்மை செயலாளராக அணு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.