Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு - சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்

Cm mk stalin- Governor Rn ravi
, சனி, 30 டிசம்பர் 2023 (18:53 IST)
தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்த நிலையில்,   இதுகுறித்து சட்ட அமைச்சர்  ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், உச்சநீதிமன்ற அறிறுத்தலின்படி, ஆளுனரின் அழைப்பை ஏற்று, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 அமைச்சர்களுடன் சந்தித்தார்.

21 மசோதாக்கள் ஆளுனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில், 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு  ஒப்புதல் தர ஆளுனரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று சட்ட அமைச்சர் ரகுபதி  கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  ''10 சட்ட முன்வடிவு இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுனர் அதை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினார்.

முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணிம் விஜய்பாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பாகன் கோப்புகளுக்கு அனுமதி கோரியுள்ளோம். அண்ணாவின் பிறந்த நாளன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புகளுக்கு மட்டுமே ஆளுனர் அனுமதி அளித்துள்ளார்.

எஞ்சிய கோப்புகளுக்கு ஆளுனர் அனுமதி தரவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்கத் தடை