Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலீடுகள் பற்றிய விவரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Advertiesment
L Murugan

Sinoj

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (18:49 IST)
முதலீடுகள் விவரங்கள், முதலீடுகள் எந்தளவில் உள்ளது என்ற விவரத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் உள்ள முன்னணி  நிறுவனங்கள் கலந்துகொண்டு, தமிழ் நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  தமிழக அரசுடன் மேற்கொண்டனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட்டில்  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை  நடத்தி வருகிறார்.

அந்த மாநாட்டில், தமிழகத்தில் வரலாற்றுப் பெருமை, முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் பற்றி ஸ்பெயின் நாட்டின் தொழில்துறையினருக்கு எடுத்துரைத்திருந்தார்.

அடுத்ததாக, யுஏஇ. ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதலீடுகள் விவரங்கள், முதலீடுகள் எந்தளவில் உள்ளது என்ற விவர்அத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? ஒப்பந்தங்கள் என்னென்ன? இரண்டரை ஆண்டுகள் செயல்பாட்டிற்கு வந்தவை எவை? என்ற விவரங்கள் தமிழக அரசு வெளியிட வேண்டும்!  ஈர்ப்பட்டதாக கூறப்பட்ட முதலீடுகள் எந்தளவில் உள்ளது என்ற விவரத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்.12-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.! பிப்.19-ல் பட்ஜெட் தாக்கல்.! சபாநாயகர் அப்பாவு..!!