Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் எடப்பாடி…

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் எடப்பாடி…
, புதன், 24 ஜூலை 2019 (12:51 IST)
சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை முதல்வர் பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்தார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஹூண்டாய் கார் நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் படி, ரூ.2000 கோடி மதிப்பில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணியில் ஹூண்டாய் நிறுவனம் இறங்கியது. இது தான் இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் ஆகும். இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி ஹுண்டாய் நிறுவனத்தின் KONA எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துவைத்தார்.
webdunia

பெட்ரோல், டீசலினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதன் காரணமாக, அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்களை கொண்டு வர தமிழக அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. KONA எலெக்ட்ரிக் காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ வரை பயணம் செய்யலாம். மேலும் 9.7 நிமிடங்களில் 100 கி.மீ. வேகத்தை எட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.30 லட்சம். மேலும் ஐந்து பேர் பயணம் செய்யும் அளவிற்கு இந்த காரில் சீட் கெப்பாசிட்டி உள்ளது எனவும் இதன் சிறப்பு அம்சங்களாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கள் போரிட்டால் ஆப்கானிஸ்தானில் ஒரு கோடி பேர் பலியாவார்கள்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதில்