சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தேவாரம் பாடிய சிவனடியார்கள்.. 40 பேர் கைது

Mahendran
சனி, 4 மே 2024 (13:24 IST)
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி சிவனடியார்கள் தேவாரம் பாடிய  நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சேலம் சத்தியபாமா உள்ளிட்ட சிவனடியார்கள் தேவாரம் பாடினர். மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடி சங்கு ஊதும் போது கனகசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
 
கனகசபை மீது ஏறி தமிழ் வேத ஆகமம் பாடுவதற்கு தீட்சிதர்கள் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிவனடியார்களை போலீசார் வெளியே அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் சேலம் சத்தியபாமா உள்ளிட்ட 40 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments