Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் மாவட்ட தலைவருக்கே திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை: ஜெயகுமார் மறைவு குறித்து அண்ணாமலை..!

Mahendran
சனி, 4 மே 2024 (13:19 IST)
நெல்லை மாவட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவருக்கே திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. 
 
கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
 
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. 
 
உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments