சிதம்பரம் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Mahendran
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (13:15 IST)
சிதம்பரம் நடராஜர்  கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது
 
சிதம்பரம் நடராஜர்  கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பிரம்மோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1983ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அறநிலையத் துறை தரப்பு வாதம் செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பதை அறிய பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments