Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவுடன் அமலாக்க துறை, வருமான வரி, சிபிஐ கூட்டணி வைத்துள்ளன: ப.சிதம்பரம்

Advertiesment
பாஜகவுடன் அமலாக்க துறை, வருமான வரி, சிபிஐ கூட்டணி வைத்துள்ளன: ப.சிதம்பரம்

Mahendran

, சனி, 13 ஏப்ரல் 2024 (16:02 IST)
பாஜகவுடன் அரசியல் கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகள் தான் கூட்டணி வைத்துள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார் 
 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவர் பேசிய போது ’தமிழகத்திற்கு இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமை வகித்தது போல் இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது என்று தெரிவித்தார் 
 
ஆனால் பாரதிய ஜனதாவோ அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சிபிஐ ஆகிய அமைப்புகளுடன் தான் கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சித்த தலைவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்றால் பாஜகவில் உள்ளவர்கள் எல்லோரும் புனிதர்களா? குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளி அல்ல. நீதிபதி தீர்ப்புக்கு பிறகுதான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தேறினார் 
 
தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் தராமல் மோடி அரசு வஞ்சித்து வருகிறது என்றும் வரி மீது வரி விதித்து மக்களை சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது என்றும் கூறினார். மேலு  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வரிக்கு வரி விதிக்கும் முறையை ஒழித்து விடுவோம் என்றும் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்பர் பிளேட் இல்லை.. ஹெல்மேட் இல்லை... சர்ச்சையில் சிக்கிய ராதிகா சரத்குமார்..!!