Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து உயிர்களை காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்டம்; சென்னையில் சோகம்!

Advertiesment
Chennai
, புதன், 28 அக்டோபர் 2020 (09:53 IST)
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பலர் தொடர்ந்து பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் என்ற இளைஞர். இவர் சமீப காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் ஆன்லைன் ரம்மியில் இழந்த இவர், தனது நண்பர்களிடமும் கடனாக பணம் பெற்று சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

இதனால் மனவிரக்தி அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக இதுபோல இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக பிரமுகர் மீது விசிகவினர் தாக்குதல்! – பெண்கள் உட்பட 42 பேர் கைது!