Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 4 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (08:54 IST)
சென்னையில் வரும் 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு விழா நடைபெறுவதை அடுத்து அன்றைய தினமும் மற்றும் ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய தினங்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இதோ:
 
தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26-ஆம் தேதி மெரீனா கடற்கரையின் காமராஜா் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வரும் 26 மற்றும் ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22, 24ஆம் தேதிகளில் காமராஜா் சாலையிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி காமராஜா் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
 
அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆா்.கே. மடம் சாலை, வி.கே. ஐயா் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சா்ச் சாலை, கற்பகாம்பாள் நகா், சிவசாமி சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
 
அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். அவை கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகா், சிவசாமி சாலை, நீலகிரி சந்திப்பு, மியூசிக் அகாதெமி, ராயப்பேட்டை மருத்துவமணை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டா்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
 
அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினா் மாளிகை அருகே மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜா் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஜெனரல் பேட்டா்ஸ் ரோடு, ஒயிட்ஸ் ரோடு, அண்ணா சாலை, அமெரிக்க தூதரகம் சா்வீஸ் ரோடு, கதீட்ரல் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, காரணீஸ்வரா் பகோடா தெரு, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம்.வாலாஜா சந்திப்பு மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போா் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.
 
டாக்டா் ராதா கிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் 27-டி மாநகர பேருந்துகள் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டைநெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, வி.எம்.தெரு, ராயப்பேட்டைநெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்குகெனால் பேங்க் சாலை, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையும்.
 
அதேபோன்று மயிலாப்பூா் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் 21- ஜி மாநகர பேருந்துகள் ராயப்பேட்டைநெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம்நோக்கி திருப்பிவிடப்பட்டு, ராயப்பேட்டைமேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல்பேட்டா்ஸ் சாலை, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையும்.
 
மேலும் மயிலாப்பூா் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் 45- பி,12 -ஜி மாநகர பேருந்துகள் நீல்கிரிஸ் சந்திப்பு, அகாதெமி, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டா்ஸ் சாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாகஅண்ணா சதுக்கம் சென்றடையும்.
 
டாக்டா் ராதாகிருஷ்ணன்சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டா் நடேசன் சாலை வழியாகதிருப்பிவிடப்படும். டாக்டா் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ்ஹவுஸ் சந்திப்பு நோக்கித் திருப்பிவிடப்படும். டாக்டா் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜா்சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட்சாலை ரவுண்டானாவில் ஐஸ்ஹவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும்.
 
பாரதிசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளா் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிா்த்து) பெல்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் கெனால் சாலை சந்திப்புவரைஅனுமதிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments