சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு நேரடி விமான சேவையை சவுதி ஏர்லைன்ஸ் தொடங்கி உள்ளதை அடுத்து ஹஜ் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் இருந்து ஜித்தா நகருக்கு விமான சேவை இருந்தது. ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னால் தற்போது மீண்டும் சென்னை - ஜித்தா நகர் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு இந்த விமான சேவை வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து சவுதி அரேபியா செல்ல 13 மணி நேரம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. சென்னை - ஜித்தா நகர் சவுதி விமான சேவை நேற்று தொடங்கியுள்ளதை அடுத்து அதில் 215க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சேவையை தொடங்க உதவி செய்த பிரதமர் மோடி, சவுதி அரேபியா உம்ரா, ஹஜ் துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு பயணிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது,.