சென்னை-சேலம் விமானம் 10 நாட்களுக்கு ரத்து: அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 12 மே 2021 (18:04 IST)
சென்னையில் இருந்து சேலத்திற்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வந்த நிலையில் 10 நாட்களுக்கு சென்னை-சேலம் விமானம் நிறுத்தப்படுவதாக விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார் 
 
சேலத்திலிருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வரத்து சுத்தமாக இல்லை என்றும் அதனால் சென்னை - சேலம் விமானசேவை ஊரடங்கு முடியும் வரை பத்து நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சேலம் விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து வரும் 22ஆம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்றும் ஆனாலும் அலுவலக பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவசர தேவைக்காகவும், மருத்துவ தேவைக்காக மட்டும் கோரிக்கை எழுந்தால் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம்: சவரன் ரூ.91,400-ஐ தாண்டியது!

அதிமுக நிகழ்ச்சிகளில் தவெக கொடியுடன் பங்கேற்க கூடாது: தவெக நிர்வாகி அதிரடி அறிவிப்பு..!

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments