தற்போது சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக சேலம் செல்ல வேண்டும் என்றால் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி வழியாக சேலம் செல்ல வேண்டும். இதற்கு சாலை மார்க்கமாக சுமார் 350 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். சென்னையில் இருந்து செல்லும் ரயில் பாதையும் இதேதான். சென்னையில் இருந்து சேலம் செல்ல சுமார் 5 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்
இந்த நிலையில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை வழியாக சேலத்தை நேரடியாக இணைக்கும் வகையில் ஒரு புதிய எக்ஸ்பிரஸ் வழி சாலையை அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு எடுத்துள்ளன. எக்ஸ்பிரஸ் சாலை வழியாக சென்னையிலிருந்து சேலத்திற்கு மூன்று மணி நேரத்தில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகளுக்கு இரண்டு மணி நேரம் பயணம் மற்றும் பணம் மிச்சமாகும்
இந்த சாலை அமைக்கும் திட்டம் குறித்து விரைவில் விரிவாக விளக்கப்பட்டு பணிகளும் ஆரம்பிக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்துள்ளன.