Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 17 April 2025
webdunia

ஆட்டத்தை துவங்கிய மழை... இன்னும் 4 நாட்களுக்கு தொடருமாம்!!

Advertiesment
heavy rain in chennai today
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:05 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. 

 
வடகிழக்கு பருவமழை ஏற்கனவே தீவிரமடைந்த நிலையில் இடையில் சில நாட்கள் மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
குறிப்பாக சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும். அதோடு, வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி, திருவண்ணாமலை, காரைக்காலில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் ஜனவரி 12 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜனவரி 8 ஆம் தேதி வரை எங்கெங்கு மழை பெய்யும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. வெளியான தகவலின் படி... 
 
6 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தேனி, நிலகிரி, கோயம்புத்தூர், புதுச்சேரி, காரைக்கால்
7 ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால்
8 ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுரேனியம் செறிவூட்டலை திடீரென அதிகரித்த இரான் - எச்சரிக்கும் உலக நாடுகள்