சென்னையில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிப்பு

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (07:30 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17-ம் தேதி முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதன்படி மிகச்சரியாக இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது 
 
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருவதையடுத்து, இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதுகுறித்த செய்தியை எதிர்பார்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொலைக்காட்சி செய்தி சேனல்களை பார்த்து வந்தனர்
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாலட்சுமி அவர்கள் சென்னையில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவித்துள்ளார் இதனை அடுத்து சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது உறுதியானதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments