Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (19:46 IST)
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டும் 2019ஆம் ஆண்டை சிறப்பாக வரவேற்க சென்னைவாசிகள் தயாராகி வருகின்றனர்.

புத்தாண்டு அன்று சென்னை பீச் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதுண்டு. ஆனால் ஒருசிலர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும், குற்றச்செயல்களில் ஈடுபடுவதுமாக இருப்பதால் சில நேரங்களில் விபரீதங்கள் ஏற்படுவதும் உண்டு

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு குறித்து சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தால் பாஸ்போர்ட் சரிபார்ப்பின் போது சிரமம் ஏற்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் கிண்டி. அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் பைக் ரேஸ் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மெரினா, சாந்தோம் , எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடற்கரையோரங்களில் குதிரைப்படைகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments