Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம்: விஷம் குடித்த இளைஞர் மரணத்தில் சந்தேகம்?

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (19:23 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வாலிபர் ஒருவரின் எச்.ஐ.வி கலந்த ரத்தம் ஏற்றியதால் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த 19 வயது இளைஞர் மனவேதனையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இளைஞரின் பெற்றோர் அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும்,  விஷம் குடித்து உயிரிழந்த வாலிபரின் உடலை அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யவும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசு மருத்துவர்கள் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும், பிற மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments