இன்று முதல் சென்னையில் கொரோனா விதிகளை மீறி வெளியே சுற்றுவோரிடம் அபராதம் வசூலிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2 ஆம் அலை இந்தியா முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் முழு ஊரடங்கை மக்கள் பலர் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. எனவே, இன்று முதல் அத்தியவசியப் பணிகள் தவிர்த்து தேவையின்றி வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே, இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளது. 200 இடங்களில் சட்டம் ,ஒழுங்கு காவல் துறையினர் சார்பிலும் 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பிலும் வாகன தணிக்கை சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்று முதல் சென்னையில் கொரோனா விதிகளை மீறி வெளியே சுற்றுவோரிடம் அபராதம் வசூலிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, தளர்வுகளை தவறாக பயன்படுத்தி பைக்கில் சுற்றுவோரிடமும், மாஸ்க் போடாத நபர்களிடமும் போலீஸார் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.