Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படி ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியா? ஒரு சல்யூட்

இப்படி ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியா? ஒரு சல்யூட்
, புதன், 29 ஜனவரி 2020 (09:26 IST)
சென்னையில் போலீஸ் அதிகாரி ஒருவர் பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் போட வேண்டிய அவசியத்தையும், ஹெல்மெட் போடுவது மட்டுமன்றி சரியான அளவிலான ஹெல்மெட் போட வேண்டும் என்பது குறித்தும் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
சென்னையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
 
இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு கூடியிருந்த மக்களிடம் ஹெல்மெட்டின் அவசியத்தையும் சரியான அளவில் ஹெல்மெட் போட வேண்டியது ஏன் என்பது குறித்தும் விளக்கி கூறினார்
 
மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என்றும் அது ஏன் என்பதையும் அவர் விளக்கிக் கூறியுள்ளார். அதேபோல் 18 வயது நிரம்பாத லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளி என்றும் அவர் கூறியது அனைவரும் சிந்திக்கத்தக்க ஒன்றாக இருந்தது.
 
இவ்வளவு பொறுமையாக பொதுமக்களுக்கு ஹெல்மெட்டின் அவசியத்தை விளக்கி கூறிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது: இதோ அந்த வீடியோ

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸை தடுக்க மந்திரம்: தலாய்லாமா