சென்னையில் விநாயகர் சிலை வைக்க முயற்சி! – இந்து முன்னணியை தடுத்த போலீஸ்!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (08:48 IST)
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க ஏற்பாடுகள் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைத்தல், ஊர்வலம் செல்லுதல் மற்றும் வழிபடுதல் ஆகியவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் விநாயகர் சிலைகளை அமைத்தே தீருவோம் என இந்து முன்னணி போன்ற அமைப்புகள் விடாபிடியாக உள்ளன. மேலும் பாஜகவும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அருகே விநாயகர் சிலை அமைப்பதற்காக இந்து முன்னணி அமைப்பினர் பந்தக்கால் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார் பந்தகால் நடும் பணியை தடுத்து அவர்களை அனுப்பிவிட்டு பந்தகாலையும் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments