Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தை தவிர்க்க எல்.இ.டி. சிக்னல்: புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தும் காவல்துறை

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (06:44 IST)
சென்னையில் பல வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமல் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகமாகி வருகிறது. இதனை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்.இ.டி. சிக்னலை போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.
 
சோதனை முயற்சியாக இந்த புதிய தொழில்நுட்ப எல்.இ.டி. சிக்னல் சென்னை காமராஜர் சாலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து அதன்பின்னர் நகர் முழுவதும் இந்த சிக்னல் விரிவுபடுத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகள் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டாப் லைன் எல் இ டி சிக்னல்களால் சாலை விபத்துக்கள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
24 மணி நேரமும் ஒளிரும் வகையில் போக்குவரத்து சிக்னலுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த எல்இடி சிக்னல் 
சிக்னலுக்கு தகுந்தால் போல, சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களில் ஒளிரும். இந்த சிக்னல் நகர் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டால் வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமலும், நிறுத்தக் கோட்டில் நிற்காமலும், சிக்னலை வேகமாகவும் கடப்பதும் இனி குறையும் என்றும், அதிகளவில் விபத்துகள் ஏற்படுத்துவதை தடுத்திடவே, இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரல்: உதயநிதிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து..!

காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்கள்: தேர்தல் தேதி அறிவிப்பு

இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments