Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம்! – தலைமறைவான நிர்வாகி அதிரடி கைது!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (09:25 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கி மோசடி செய்த அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்கள் பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் வடிவேலு, யூட்யூபர்கள் கோபி – சுதாகர், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து IACHRC எனப்படும் சர்வதேச ஊழல் தடுப்பு, மனித உரிமைகள் அமைப்பு நடத்தியது. இந்த கௌரவ டாக்டர் பட்டங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டவை என கருதப்பட்டது.

தனியார் அமைப்புகள் ஊழல் தடுப்பு, மனித உரிமைகள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த அனுமதி இல்லாத நிலையில், அண்ணா பல்கலைக்கழக பெயர் மற்றும் அரசு முத்திரை ஆகியவற்றையும் அந்த அமைப்பு அழைப்பிதழ் ஆகியவற்றில் பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பட்டம் போல திட்டமிட்டு மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய IACHRC அமைப்பின் நிர்வாகி ஹரிஷ் தலைமறைவான நிலையில் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று ஆம்பூரில் தலைமறைவாக இருந்து ஹரிஷை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments