Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊரடங்கை சென்னை மக்கள் மதிக்கவில்லை: ஐ.ஐ.டி குழு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஊரடங்கை சென்னை மக்கள் மதிக்கவில்லை: ஐ.ஐ.டி குழு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
, வெள்ளி, 8 மே 2020 (18:39 IST)
ஊரடங்கை சென்னை மக்கள் மதிக்கவில்லை
ஊரடங்கு உத்தரவை சென்னை மக்கள் மதிக்கவில்லை என்றும் அதனால்தான் சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி இருப்பதாகவும் ஐஐடி குழு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது
 
சென்னையில் கொரோனா அதிகம் பரவியது ஏன் என்பது குறித்து சமீபத்தில் ஐஐடி நடத்திய ஆய்வின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ‘ஸ்மார்ட் போனில் வைத்திருப்பவர்கள் எங்கெல்லாம் சென்று உள்ளார்கள் என்ற வரைபட ஆய்வு தரவுகளை உருவாக்கி அதன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் விழுப்புரம், சென்னை, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக வார இறுதி நாட்களிலும் மூன்றாவது கட்ட ஊரடங்கு நேரத்திலும் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததாகவும் ஊரடங்கை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
 
ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் இருந்ததை விட மே மாதம் 17 சதவீதம் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித்து உள்ளதை அடுத்து தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமழிசை மார்க்கெட்டை ஆய்வு செய்யும் முதல்வர், துனை முதல்வர்