Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில் 3வது வழித்தடத்தின் சுரங்கம் தோண்டும் பணி.. முக்கிய தகவல்..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (20:01 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் மூன்றாவது தடத்தின் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த திட்டத்தில் ஏழு சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 3. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45 கிலோமீட்டர் நீளத்தில் 15 மெட்ரோ நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கிலோ மீட்டர் நீளத்தில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான ஒன்பது கிலோ மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாதை கட்டும் பணி சில மாதங்களாக நடந்த நிலையில் இந்த பகுதியில் மட்டும் ஏழு சுரங்கங்கள் கட்டப்படுகிறது.

இந்த ஏழு சுரங்கங்களின் பணி முடிவடைந்து விட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர்கொண்டு மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவேறியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜினியை சந்தித்ததே அரசியல்தான்.. அரசியலுக்காகதான்! - சீமான் குடுத்த ட்விஸ்ட்!

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

அடுத்த கட்டுரையில்
Show comments