Publish Date: Fri, 28 Jan 2022 (11:29 IST)
Updated Date: Fri, 28 Jan 2022 (11:30 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் இயங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கை ரத்து செய்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது
இதனை அடுத்து மெட்ரோ ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. சென்னையில் மெட்ரோ ரயில் இனிய அதிகாலை 5.30 முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என்பது குறிப்பிடதக்கது