Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் பாதிப்பு

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (08:30 IST)
சென்னையின் வரப்பிரசாதங்களில் ஒன்று மெட்ரோ ரயில். குறிப்பாக அண்ணா சாலையில் பேருந்தில் சென்றால் ஒரு மணி நேரம் ஆகும் பகுதிக்கு மெட்ரோ ரயிலில் சென்றால் கால்மணி நேரத்தில் அதிலும் குளுகுளு ஏசியில் செல்லலாம். கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இந்த மெட்ரோ ரயில் சேவை
 
இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தடைபடுவது பயணிகளை அவதிக்குள்ளாக்குகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மின்கோளாறால் விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆயிரம் விளக்கு-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக  டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை ஒரு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் ரயில்கள் தாமதமாக வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இருப்பினும் மின்கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதால் இன்னும் சிலமணி நேரங்களில் ஆயிரம் விளக்கு-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் இருவழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments