Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பிக்களின் ஆவேசத்தை அடக்க பாஜக கையில் எடுக்கும் ஆயுதம்!

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (07:36 IST)
கடந்த முறை அதிமுக எம்பிக்கள் 38 பேர் இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பாஜகவுக்கு ஆதரவான நிலையையே எடுத்ததால் மத்திய அரசுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போதைய மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நிலையில் 38 எம்பிக்களை கொண்ட திமுக எம்பிக்கள் பெரும்பான்மை கொண்ட பாஜக அரசை ஆட்டி வைக்கின்றனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உள்பட திமுக எம்பிக்களின் ஆவேசமான பேச்சு, பாஜகவின் கனவு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஆகியவை பாஜகவுக்கு உறுத்துதலாக உள்ளது. மேலும் வைகோ உள்பட இன்னும் ஒருசிலர் மாநிலங்களவைக்குள் வந்துவிட்டால் அதன்பின் நிலைமை என்ன ஆகும் என்பதை சொல்லவே தேவையில்லை
 
இந்த நிலையில் திமுகவின் ஆவேசமான வேகத்திற்கு முட்டுக்கட்டை போட பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாம். அதற்கு அக்கட்சி கையிலெடுக்கும் ஆயுதம் வழக்கம்போல் வருமான வரித்துறைதான். திமுக தலைவருக்கு நெருக்கமான ஒருசிலர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், திமுக பிரமுகர்களின் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்த கணக்குகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் ஒரு அதிரடி நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் திமுகவை ஆஃப் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாம். பாஜக ஒருபக்கம் குடைச்சலை தொடங்கிவிட்டது என்றால் மாநில அரசும் தன்பங்குக்கு திமுக எதிராக சில காய்களை நகர்த்தி வருகிறதாம். ‘தி.மு.க தலைவர் மீதிருக்கும் பழைய வழக்குகள் விசாரிக்கப்படும்’ என்று எடப்பாடி அவ்வப்போது கூறி வருவதற்கு பின்னணி ஏதாவது இருக்குமோ என்று திமுக தரப்பு சந்தேகப்படுவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments