Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரந்தூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு: தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

Mahendran
வியாழன், 13 மார்ச் 2025 (11:05 IST)
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தை விரைவில் விமான நிலையம் வரவுள்ள பறந்தவூர் வரை நீடிக்க திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேபோல், மாயவரம் இருந்து கோயம்பேடு வழியாக சோளிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது வழித்தடத்தை, கோயம்பேட்டிலிருந்து ஆவடி வரை நீடிக்கவும் திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த இரண்டு நீடிப்பு திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை பரிசீலனையில் உள்ளது, முடிந்தவுடன் ஒப்புதல் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த திட்டத்தின் படி, மெட்ரோ ரயில் பூந்தமல்லியில் இருந்து தொடங்கி செம்மரபாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பறந்து ஒரு விமான நிலையம் சென்றடையும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 52 கி.மீ. தொலைவில் 20 ரயில் நிலையங்கள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்! - கன்னியாகுமரியில் ஜூன் 22-இல் நடைபெறுகிறது

2400 ரூபாய் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும்.. அரசு மருத்துவமனை முன் நடக்கும் வியாபாரம்.. அதிர்ச்சி தகவல்..!

KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி: எஞ்சினியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments